தமிழ்நாடு

கரூர்: போதையில் மயங்கி கிடந்த கணவனை செருப்பால் அடித்து இழுத்துச் சென்ற மனைவி

கரூர்: போதையில் மயங்கி கிடந்த கணவனை செருப்பால் அடித்து இழுத்துச் சென்ற மனைவி

kaleelrahman

கரூரில் மதுபோதையில் மதுபான கடை அருகே மயங்கி கிடந்த கணவனை மனைவி செருப்பால் அடித்து இழுத்துச் சென்றார்.

கரூர் தான்தோன்றிமலையில் உள்ள மதுபான கடைக்கு வந்த, அந்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, மதுபாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்கிய மதுபான கடை விற்பனையாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை கடை ஊழியர்கள் அடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து போதையில் மயங்கி சாலையில் விழுந்துகிடந்த அந்த நபரின் மனைவிக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை வாசலுக்கு வந்த அந்த நபரின் மனைவி போதையில் படுத்திருந்த கணவரை எழுப்ப முயன்றார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் கோபமடைந்த அந்த பெண் செருப்பை கழட்டி தன் கணவரை அடித்தார். மனைவி அடித்ததில் அரைகுறையாக போதை தெளிந்த ஆசாமியை அவரது மனைவி இழுத்துச் சென்றார்.