கரூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாணவி உயிரிழந்தது குறித்து பெற்றோர் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகாரில் காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மீது மாவட்ட எஸ்.பி நடவடிக்கை எடுத்துள்ளார். காவல் ஆய்வாளர் கண்ணதாசனை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி எஸ்.பி சுந்தர வடிவேல் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுவரும் 17 வயது பள்ளி மாணவி நேற்று மாலை பள்ளி முடித்து வீடு திரும்பியிருக்கிறார். தனது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்த சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த மாணவி இறப்பதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. அந்தக் கடிதத்தில் பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசிப்பெண் நானாகத்தான் இருக்கவேண்டும் என்று கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.