தமிழ்நாடு

'ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எந்த சேவையும் கிடையாது'- கரூர் ஆட்சியர் எச்சரிக்கை

'ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எந்த சேவையும் கிடையாது'- கரூர் ஆட்சியர் எச்சரிக்கை

JustinDurai

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு எந்த சேவையும் வழங்கப்படாது என கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வரும் 18-ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், உணவகங்கள், பெட்ரோல் பங்குகள், தொழிற்சாலைகள் என எந்த இடத்திற்கும், தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு சேவையும் வழங்கப்பட மாட்டாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அனைத்து பகுதிகள், நிறுவனங்களின் முகப்புகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளிலும், தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டாயம் மதுபானம் வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தண்ணீர் வசதியில்லாத மலை கிராமத்திற்கு தண்ணீர் தொட்டி வழங்கிய கோவை சரக டிஐஜி