தமிழ்நாடு

கரூர்: ரோலர் ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைத்த 5 வயது சிறுமி

kaleelrahman

கரூரில் ரோலர் ஸ்கேட்டிங்கில் இரண்டு வயது குழந்தை மற்றும் 5 வயது சிறுமி ஆகியோர் நோபல் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

கரூரைச் சேர்ந்த 5 வயது சிறுமி பிரித்விகா, நோபல் உலக சாதனைக்காக தேசிய நெடுஞ்சாலையில் 13 கிலோமீட்டர் தூரத்தை 25 நிமிடங்கள் 33 விநாடிகள் கடந்து இந்த சாதனையை படைத்துள்ளார். நோபல் உலக சாதனை நிறுவனத்தின் பிரதிநிதி வினோத் முன்னிலையில் இந்த சாதனையை சிறுமி பிரித்விகா நிகழ்த்திக் காட்டினார். இதையடுத்து உடனடியாக அந்த சிறுமிக்கு சான்றிதழ் மற்றும் மெடல் அணிவிக்கப்பட்டது.

இதேபோல, மற்றொரு இரண்டு வயது குழந்தை ஜெசிகா 190 மீட்டர் சுற்றளவு கொண்ட ஸ்கேட்டிங் திடலை 30 நிமிடங்கள் 23 விநாடிகளில், 24 முறை வலம் வந்து புதிய சாதனையை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற ரிலே ரோலர் ஸ்கேட்டிங்கில் 52 பேர் 5மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் திடலில் ரிலே ரோலர் ஸ்கேட்டிங் சாதனையை நிகழ்த்தினர்.