செய்தியாளர்: சந்திரன்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இன்று அதிகாலை அறந்தாங்கியில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தும் திருச்சி நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் நிகழ்விடத்திற்குச் சென்று, தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஐந்து பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.