தாமரைக்கண்ணன் - 25 - பாகநத்தம், கரூர்
ஹேமலதா - - 28 - விஸ்வநாதபுரி, கரூர்
சாய்லெட்சனா - 8 - விஸ்வநாதபுரி, கரூர்
சாய்ஜீவா - 4 - விஸ்வநாதபுரி, கரூர்
சுகன்யா - 33- காவலர் காலனி, கரூர்
ஆகாஷ் - 24 - காமராஜ்புரம் வடக்கு, கரூர்
தனுஷ்குமார் -24 - காந்திகிராமம், கரூர்
வடிவழகன் - 54- பசுபதிபாளையம், கரூர்
ரேவதி - 52 - கொடுமுடி, ஈரோடு
சந்திரா - 40 - ஏமூர் புதூர், கரூர்
குருவிஷ்ணு - 2 - வேலுச்சாமிபுரம், கரூர்
ரமேஷ் - 32 - கோடங்கிபட்டி, கரூர்
சனோஜ்வர்ஷன் - 13 - தாந்தோனி கிராமம், கரூர்
ரவிகிருஷ்ணன் - 32- எல்.என்.எஸ்.கிராமம், கரூர்
பிரியதர்ஷினி - 35 - ஏமூர் கிராமம், கரூர்
தரணிகா - 14 - ஏமூர் கிராமம், கரூர்
பழனியம்மாள் - 11 - வேலுச்சாமிபுரம், கரூர்
கோகிலா - 14 - வேலுச்சாமிபுரம், கரூர்
மகேஷ்வரி - 45 - அருகம்பாளையம், கரூர்
அஜிதா - 21 - அரவக்குறிச்சி, கரூர்
மாலதி - 36 - ராயனூர் வடக்கு, கரூர்
சுமதி - 50 - ரெத்தினம் சாலை, கரூர்
மணிகண்டன் - 33 - காங்கேயம், திருப்பூர்
சதீஷ்குமார் - 34 - கொடுமுடி, ஈரோடு
கிருத்திக்யாதவ் - 7 - ஐந்து ரோடு, கரூர்
ஆனந்த் - 26 - சுக்காம்பட்டி, சேலம்
சங்கர் கணேஷ் - 45 - குஜிலியம்பாறை, திண்டுக்கல்
விஜயராணி -42 - பிச்சம்பட்டி, கரூர்
கோகுலபிரியா -28 - காங்கேயம், திருப்பூர்
பாத்திமா பானு - 29 - ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்
கிஷோர் - 17 - அன்பு நகர், கரூர்
ஜெயா - 55 - வெங்கமேடு, கரூர்
அருக்காணி - 60 - ஏமூர் கிராமம், கரூர்
ஜெயந்தி - 43 - புகளூர், கரூர்
கோகுலஸ்ரீ - 24 - உப்பிடமங்கலம், கரூர்
வீக் எண்ட் கான்செப்ட்டிலிருந்து விஜய் வெளியே வர வேண்டும். மாவட்டத்திற்கு ஒரு இடம் என்ற முறையை மாற்ற வேண்டும். கூட்டத்தை நடத்த விஜய்க்கும் உரிமை உள்ளது. இதிலிருந்து விஜய் மீண்டு வர வேண்டும். விஜயின் பயணத் திட்டத்தை மாற்ற வேண்டும்.
வளர்ந்த மாநிலமாக உள்ள தமிழகத்தில் கட்சி தலைவருக்காக வீரச் சாகசங்களை செய்யாதீர்கள். பாதுகாப்பு இல்லாத இடத்திற்கும், கூட்டம் அதிகமான இடத்திற்கும் சென்று உயிர்களை மாய்த்துக்கொள்ளாதீர்கள். எதற்காக நீண்ட நேர பிரச்சார அனுமதி கொடுக்கப்படுகிறது? விஜயின் பயணத்தில் குளறுபடிகள் உள்ளன. இதனை விஜய் திருத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு நபர் நீதிபதி ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை. CBI அல்லது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன் உத்தரவின் பேரில் நீதிபதி நியமனம் செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும். 40 பேர் உயிரிழந்த மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் பதவியில் இருக்க தகுதியில்லை. முதலில் கேட்ட இடத்தில் ஏன் அனுமதி வழங்கப்படவில்லை? இளைஞர்கள் அதிகம் கூடும் இடங்களில் யாருடைய பேச்சையும் யாரும் கவனிக்க மாட்டார்கள். ஏன் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்துள்ளீர்கள்? ஏன் நிரந்தர டிஜிபி நியமனம் செய்யவில்லை? சென்னை மெரினாவில் விமானக் கண்காட்சியில் பங்கேற்ற போது உயிரிழப்பு ஏற்பட்டது. அப்போது முதல்வரும் துணை முதல்வரும் பங்கேற்றனர். அங்கு விஜய் வரவில்லை, ஆனால் 5 பேர் உயிரிழந்தனர்; 70 பேர் மயக்கமடைந்தனர். எல்லாம் முடிந்த பிறகு பேட்டி கொடுப்பது தான் ஏடிஜிபியின் வேலையா?" எனத் தெரிவித்தார்.
பெரம்பலூர், கரூர், திருவாரூருக்கு விஜய் போன்றவொரு சினிமா ஸ்டார் செல்கிறார் என்றால் கிராமத்து மக்கள் அங்கு கூடத்தான் செல்வார்கள். அதுவும் மொத்த மாவட்டத்துக்கு ஒரேயொரு பாயிண்ட்டில்தான் அவர்களை சந்திக்கின்றீர்கள். பிற அரசியல் கட்சிகள், ஒரு மாவட்டத்துக்கு 5 பாயிண்ட் வைப்பார்கள்.
நீங்கள் ஒரேயொரு பாயிண்ட்டில், அதிலும் சனிக்கிழமை பார்த்து சந்திக்கும்போது, விடுமுறை தினமென ஆசையில் குழந்தைகளோடுதான் மக்கள் வருவார்கள். விஜய் போன்றோர் இதை யோசித்து செயல்பட வேண்டும்
"சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்கு பிறகு பல தகவல்களின் அடிப்படையில் பேசுகிறேன். பல குளறுபடிகள் நடந்துள்ளன. முதல் குற்றச்சாட்டு தமிழக அரசின் மீது தான். 500 போலீசார் பாதுகாப்பில் இருந்தனர் என ஏடிஜிபி பலவீனமான பதிலை சொல்கிறார்.
ஒரு இடத்துக்கு அனுமதி கொடுக்கும் முன் காவல்துறை 1,000 முறை யோசிக்க வேண்டும்; எமெர்ஜென்சி ஆம்புலன்ஸ் போகக்கூட வழியில்லாத வேலுச்சாமிபுரத்துக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள்? அங்கு ஏதேனும் VVIP இருந்து அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் என்ன செய்திருப்பார்கள்?
எனவே மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை பணிநீக்கம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் சஸ்பெஷனாவது செய்ய வேண்டும். அரசியல் கட்சிக்காரர்கள் சொல்வதை கேட்கவா ஐபிஎஸ் யூனிஃபார்ம்?.
தாமாக முன்வந்து முதல்வரே சிபிஐ விசாரணை வைக்க வேண்டும்; கூட்டத்தை யாரேனும் விஷத்தனமாக தூண்டிவிட்டார்களா? ஆம்புலன்ஸ் எப்போது வந்தது? லத்தி சார்ஜ் நடந்தது ஏன்? மின்தடை நடந்தது ஏன்? செருப்பு வீசப்பட்டது ஏன்?
இதையெல்லாம் சிபிஐ நுணுக்கமாக கண்காணித்து, விசாரிக்க வேண்டும். எந்த சந்தேகத்திற்கும் இடம் எடுக்கக்கூடாது" எனத் தெரிவித்தார்
"கரூர் துயரச்சம்பவத்தில் 40 அப்பாவிகளை பறிகொடுத்துள்ளோம்; இன்னும் கவலைக்கிடமாய் சிலர் உள்ளனர். அழுகுரல் மட்டுமே கேட்கிறது. தமிழகத்தில் இதற்கு முன் இப்படி நடந்ததில்லை; இனியும் நடக்கக்கூடாது. இறந்தவர்கள் குடும்பங்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்; இதை கருத்தில் கொண்டு கரூர் பாஜக சார்பில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் கொடுக்கப்படும். மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கும் உதவ தீர்மானித்துள்ளோம்.
தமிழ்நாட்டில் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சரியான இடம் ஒதுக்கப்படுவதே இல்லை; சரியான அளவில் காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு கூட்டங்கள் கட்டுப்படுத்தப்படுவதும் இல்லை. கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள், மெரினா Airforce Show இறப்பு தொடங்கி, தற்போது கரூர் தவெக கூட்டநெரிசல் வரை பல இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவறு நடந்து கொண்டே உள்ளது.
எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீதுதான். முதல் தவறு மாவட்ட நிர்வாகம், காவலர்கள் மீதுதான். அவர்கள் உரிய இடத்தை கொடுக்கவில்லை. வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடத்த வாய்ப்பே இல்லையென தெரிந்தபோதும் ஏன் அனுமதி கொடுக்கிறார்கள்? சரியான இடத்தை கொடுப்பது அரசின் கடமை. முடியவில்லை என்றால், கூட்டத்திற்கு அனுமதியே கொடுக்காதீர்கள" எனத் தெரிவித்தார்.
கரூரில் நேற்று நடைப்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கரூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. நிலையில், அருணா ஜெகதீசன் தனது விசாரணையைத் தொடங்கியிருக்கிறார். குறிப்பாக சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில், விஜய் பரப்புரை மேற்கொண்ட இடத்தில் அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கரூர் சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசை விமர்சித்திருந்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முந்தைய கூட்டங்களை ஆய்வு செய்த பிறகுதான், கூடுதல் கட்டுப்பாடுகளை தவெகவிற்கு காவல் துறை விதித்ததாகவும், உடனே தவெகவினர் நீதிமன்றத்தில் முறையிட்டதாகவும் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். காவல் துறை நிபந்தனைகள் எதுவும் தவெக பரப்புரையில் கடைபிடிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், தவெகவினர் எல்லை மீறி நடக்க எதிர்க்கட்சி தலைவரின் செயல்பாடுகளும் காரணமாக அமைத்துவிட்டது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆம்புலன்ஸ் வந்தால் அரசாங்கம் இடையூறு செய்கிறது என, தவறான தமிழகத்திற்கு தவறான மன ஓட்டத்தை புகுத்தியவர் பழனிசாமி எனவும் விமர்சித்துள்ளார். காவல் துறை விதித்த நிபந்தனைகளை கடைபிடிக்காததாலேயே, கரூர் சம்பவம் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அனுமதி தராவிட்டால் அதில் அரசியல் செய்வது, அனுமதி அளித்தால் நிபந்தனைகளை மீறுவது என, மோசமான அரசியலுக்கு தவெக மாறிவருவதாகவும் சாடியுள்ளார். கூட்டத்தை காட்ட முட்டு சந்துதான் தேவை என, மக்களை அலைக்கழிப்பதே பழனிசாமி போன்றோரின் கேவலமான அரசியலாக இருப்பதாக கூறியுள்ள மா.சுப்பிரமணியன், மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள், பிணங்களின் மீது அல்ல என கூறியுள்ளார்.
நாமக்கல்லில் பரப்புரையை முடித்த தவெக தலைவர் விஜய், மாலை 6.40 மணிக்கு கரூரில் பரப்புரை மேற்கொண்ட இடத்தை வந்தடைகிறார். 10 நிமிடங்களுக்கு பின்னர், விஜய் மைக்டெஸ்ட் செய்கிறார். 7 மணி 6 நிமிடங்களுக்கு பரப்புரை களத்தில், ஒருபகுதியில் மின் தடை ஏற்பட்டது. 7.10 மணியளவில் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் அழுகுரல் கேட்டது. 7 மணி 12 நிமிடங்களுக்கு, விஜய் பேச்சை தொடங்குகிறார். 2 நிமிடங்கள் கழித்து, விஜய் பேசுவது கேட்கவில்லை என தொண்டர்கள் கோஷமிடுகின்றனர்.
7மணி 20 நிமிடங்களுக்கு, ஆம்புலன்ஸ் ஒன்று அவ்வழியாக செல்கிறது. தொடர்ந்து விஜய் பேச்சை தொடங்குகிறார். ஆனால் மைக் வேலை செய்யவில்லை. 7 மணி 33 நிமிடங்களுக்கு பல ஆம்புலன்ஸ்கள் பரப்புரை நடந்த இடத்திலிருந்து, கரூர் அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தன. ஒரு நிமிடத்திற்கு பிறகு விஜயின் மைக் மீண்டும் வேலை செய்யவில்லை. அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளன. 7 மணி 43 நிமிடங்களுக்கு விஜய் பேச்சை நிறைவு செய்துவிட்டு, புறப்படுகிறார்.
ஆளுங்கட்சி தவிர, பிற கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு, காவல் துறையினர் உரிய பாதுகாப்பு அளிப்பதில்லை என அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோருடன், கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற பழனிசாமி, கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், கூட்டநெரிசலில் சிக்கி காயமுற்று, சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல் துறையினர் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அரசியல் நோக்கத்துடன் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அதிகாலை 3 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆணையத்தின் விசாரணை அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கரூரில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து இரவோடு இரவாக புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு சென்ற அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் வந்தடைந்தார். அதிகாலை 3.30 மணியளவில் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்றடைந்த அவர், பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியே சந்தித்து ஆறுதல் கூறினார்.
கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 2 மகள்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் தான்தோன்றி மலை சிவசக்திநகரைச் சேர்ந்த ஹேமலதா மற்றும் 8 வயதான சாய்லக்ஷனா, 4 வயதான சாய்ஜீவா ஆகிய செல்லக் குழந்தைகளின் மரணம், மொத்த ஊரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. தங்கள் எதிர்காலத்தின்மீது ஆயிரம் கனவுகளுடன், ஆர்வமிகுதியில் தாயும் இரண்டு குழந்தைகளும் ஒன்றாகப் பரப்புரைக் கூட்டத்தைக் காணச் சென்றனர்.
விஜயின் பேச்சைக் கேட்க, ஆர்ப்பரிக்கும் கூட்டத்தின் நடுவே அந்தத் தாயும், கைக்குழந்தைகளும் மகிழ்ச்சியோடு நின்றார்கள். ஆனால், ஒரு சிலநிமிடங்களில் அந்தச் சூழல், கொடூரமான முடிவைக் கொண்டுவரும் என அவர்கள் அறிந்திருக்கவில்லை. எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய அந்த மூன்று பேரும்,பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று, அந்த வீட்டில் தாயின் சிரிப்பும், குழந்தைகளின் கலகலப்பும் நிரந்தரமாக மௌனித்துவிட்டது... வீட்டில் உள்ளோர், ஒரே நேரத்தில் மூன்று பேரை இழந்து நிற்கின்றனர்... இந்த சம்பவம் காலத்தால் மறக்க முடியாத பெரும் சோகத்தை கரூரில் பதித்துவிட்டது...
கரூரில் நேற்று நடைப்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கரூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.