எம்ஜிஆரால் ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட அதிமுக, சசிகலாவின் குடும்ப சொத்தா? என கருப்பசாமி பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்களை கட்சியில் திரும்பச் சேர்த்து உயர் பதவி வழங்க சசிகலாவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
டி.டி.வி தினகரனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், சசிகலாவால் வழங்கப்பட்ட அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு அளிப்பீர்களா என கேட்டதற்கு, ஆதரவாளர்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். வர்தா புயல், ஜல்லிக்கட்டு, சென்னை குடிநீர் பிரச்னை போன்ற விஷயங்களில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டதாக கூறிய அவர், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதுவரை சிறப்பான முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். எம்ஜிஆரால் ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட அதிமுக சசிகலாவின் குடும்ப சொத்தா? என்றும் கருப்பசாமி பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.