தமிழ்நாடு

கருணாநிதியை காண காலை முதல் காவேரியில் குவியும் தொண்டர்கள்

கருணாநிதியை காண காலை முதல் காவேரியில் குவியும் தொண்டர்கள்

webteam

‌திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அவரை காண தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் இன்று அதிகாலை நலிவு ஏற்பட்டதை அடுத்து, அவர் காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். காவேரி மருத்துமனையில் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தமிழரசு காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். காவேரி மருத்துவமனை அமைந்துள்ள ஆழ்வார்பேட்டையில் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

திடீரென ஏற்பட்ட இரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் குழு கருணாநிதியின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது கருணாநிதி உடல் நலத்துடன் உள்ளார் என காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இருப்பினும் அவரை காண ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.