சபாநாயகர் தனபாலை நீக்கக்கோரி சட்டப்பேரவைச் செயலரிடம் கருணாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.
சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறியும் கருணாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பேரவையின் நடவடிக்கைகள், அரசியல் சட்டங்களை சபாநாயகர் தனபால் மீறுவதாக குற்றஞ்சாட்டியுள்ள கருணாஸ் தரப்பு, சபாநாயகரை நீக்க சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக எம்.எல்.ஏ கருணாஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இரட்டை சிலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று தற்போது அரசுக்கு எதிராக செயல்படுவதால், ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாகத் தகவல் வெளியாகின. இந்நிலையில் சபாநாயகர் தனபாலை நீக்கக்கோரி சட்டப்பேரவைச் செயலரிடம் கருணாஸ் தரப்பு மனு அளித்துள்ளது.