முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ் எம்.எல்.ஏ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், அ.தி.மு.க. அரசையும் கடுமையாக விமர்சித்து வந்ததையடுத்து கருணாஸ் எம்.எல்.ஏ கடந்த சில நாட்களுக்கு முன் கைது சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.
அவரை வேறொரு வழக்கில் கைது செய்ய திருநெல்வேலி போலீசார் சென்னைக்கு வந்தனர். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்ந்தார். இதனால் அவரை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. கருணாசை தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உள்பட முக்கிய பிரமுகர்கள் மருத்துமனைக்கு ச் சென்று பார்த்தனர். பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கருணாஸ், இன்று காலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லினை கோபாலபுரம் வீட்டில் சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ‘ இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். இந்த அரசு என்னை கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்கள் கூறுகிறார்கள். என்னை பல்வேறு வழக்குகளில் கைது செய்ய போலீசார் முயன்றனர். என்னை மு.க.ஸ்டாலினோ, டி.டி.வி. தினகரனோ இயக்கவில்லை. தமிழக சபாநாயகர் தராசு முள் போன்று இருக்க வேண்டும். ஆனால் அவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்’ என்றார்.