தமிழ்நாடு

புலிப்படை நிர்வாகிகளை கலைத்தார் கருணாஸ்

புலிப்படை நிர்வாகிகளை கலைத்தார் கருணாஸ்

Rasus

நடிகர் கருணாஸ், தனது முக்குலத்தோர் புலிப்படையின் நிர்வாகிகளை கூண்டோடு கலைத்துள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே நிர்வாகிகளாக‌ச் செயல்பட்டவர்கள் அதிகாரப்பூர்வ அனுமதி கடிதம் இல்லாமல் தற்காலிகமாகவே செயல்பட்டதாகவும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

விரைவில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் குறித்து‌ அறிவிப்பு வெளியிடப்படும் என முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். மாநில நிர்வாகிகள் திடீரென கூண்டோடு கலைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.