தமிழ்நாடு

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம்: கருணாஸ்

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம்: கருணாஸ்

webteam

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை எத்தனை தடைகள் வந்தாலும் இந்த பொங்கலுக்கு நடத்துவோம் என முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணத்திற்காக நடத்தப்படும் குதிரை விளையாட்டு, மனிதர்களை மனிதர்கள் குத்திக்கொல்லும் குத்துச்சண்டை போட்டி இவற்றையெல்லாம் ரசிக்கும் மத்திய அரசு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு மட்டும் தடைவிதிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், ஜல்லிக்கட்டு விஷயத்தில் காங்கிரஸ், பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் துரோகம் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.