தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் கருணாநிதியின் சிலை திறக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் கருணாநிதியின் சிலை திறக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

Rasus

தமிழகம் முழுவதும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறக்கப்படும்‌ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் பெரியார், அண்ணா, எம்ஜி.ஆர். ஆகியோரின் சிலைகள் உள்ள நிலையில், அங்கு கருணாநிதியின் சிலையையும் வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர், சிலை வைக்க அனுமதி கிடைத்ததையடுத்து, அங்கு நிறுவப்பட்ட கருணாநிதியின் எட்டரை அடி உயர வெண்கல சிலையை, திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், பிறந்தது முதல் இறந்த பிறகும் கூட போராடியவர் கருணாநிதி என புகழாரம் சூட்டினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அதிமுக-வில் ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்தாதது ஏன்? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அத்துடன் தமிழகம் முழுவதும் கருணாநிதியின் சிலை திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.