தமிழ்நாடு

கருணாநிதிக்கு விஜயகாந்த் கவிதாஞ்சலி

கருணாநிதிக்கு விஜயகாந்த் கவிதாஞ்சலி

webteam

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கவிதை மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள‌ விஜயகாந்த், கருணாநிதியின் மறைவுக்கு கண்ணீருடன் காணொலி காட்சி ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். இந்தநிலையில், விஜயகாந்த் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உலகமே கலைஞர் என்று அழைத்தாலும், கருணாநிதியை அண்ணா என்று தான் அழைத்ததை விஜயகாந்த் நினைவுக் கூர்ந்துள்ளார். 

அந்தி சாயும்பொழுது ஒரு சூரியன் மறைவது இயற்கை, ஆனால் நேற்று மாலை இருசூரியன் ஒ‌ரு சேர மறைந்ததோ என்று என்னும் வகையில், இவ்வுலகையே இருட்டாக்கியது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். கருணாநிதியின் உடல் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும், அவரது சரித்திரம் சகாப்தமாய் என்றும் இருக்கும் என்று விஜயகாந்த் வணங்கியுள்ளார். கருணாநிதி தன்னை விஜி என்று அழைப்பதை நினைவுக் கூறும் வகையில் விஜி என்ற விஜயகாந்த் என அவர் கையெழுத்திட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.