தமிழ்நாடு

கருணாநிதி பேசுகிறார்: துரைமுருகன் ஃபேஸ்புக்கில் தகவல்

கருணாநிதி பேசுகிறார்: துரைமுருகன் ஃபேஸ்புக்கில் தகவல்

webteam

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பேச முடியாமல் இருந்தார். தற்போது அவர் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு பேசுவதாக அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

துரைமுருகன் தனது ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவு,

திமுக தலைவர் கருணாநிதியின் தொண்டைக்குழி வழியாக குழாயை உள்ளே விட்டு அடிக்கடி சளி எடுக்க வேண்டி இருப்பதால் பேச இயலவில்லை என தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன் குழாயை எடுத்துவிட்டு துவாரத்தையும் அடைத்து மருத்துவர்கள் பேச சொன்னார்கள். அப்போது அவரிடம் உங்கள் பெயர் என்ன எனக்கேட்க ?"என் பெயர் கருணாநிதி'' என்றார்... அடுத்ததாக உங்களுக்கு யாரைப்பிடிக்கும் எனக்கேட்க? ''அறிஞர் அண்ணா'' என கூறினார். பின்னர் என்னை யார் எனக்கேட்க? துரை என்றதும், என் கண்கள் கசிந்தன என்று பதிவிட்டுள்ளார்  மீண்டு_வருவார்_தலைவர்..." வைரவிழா "நாயகர் கலைஞர் என ஃபேஸ்புக்கில் திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பதிவிட்டுள்ளார்.