திருவண்ணாமலை தேரோட்டம்
திருவண்ணாமலை தேரோட்டம் pt web
தமிழ்நாடு

கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் இன்று தேரோட்டம்!

PT WEB

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் பகலிலும் இரவிலும் சுவாமிகள் வீதி உலாவரும் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது.

ஏழாம் நாள் திருவிழாவான இன்று பஞ்ச மூர்த்திகள் 5 பேரும் ஐந்து விதமான தேர்களில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அதன் முதல் நிகழ்வாக விநாயகர் தேர், தனுர் லக்னத்தில் இன்று காலை வடம் பிடிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து மாடவிதிகளில் இழுத்துச் சென்றனர். இந்த விநாயகர் தேர் நிலையை அடைந்தவுடன் முருகர் தேர் வடம் பிடிக்கப்படும். முருகர் தேர் தன் நிலையை வந்து அடைந்தவுடன் மகாரதம் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார் தேர், மாட வீதிகளில் பவனி வரும். இந்த தேர் இரவு எட்டு மணி அளவில் தன் நிலையை அடைந்தவுடன் பராசக்தி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே மாட வீதிகளில் இழுத்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.