தமிழ்நாடு

திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத் திருவிழா

jagadeesh

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையடுத்து 10 நாட்களுக்கு இரவும் பகலும் இவ்விழா நடைபெறுகிறது. பத்தாம் நாளான வரும் 29ஆம் தேதி காலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் ஏற்றப்படும் நாளில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபத் திருநாளன்று பக்தர்கள் கிரிவலம் செல்லவும் , மலை ஏறவும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.