தம்முடைய சொத்துக்கள் குறித்த அனைத்து விவரங்களையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “சொத்து பற்றி தவறான விவரம் தந்திருந்தால் என்னை எம்.பி பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்ய முடியும். என் சொத்துக்கள் அனைத்தும் சட்டப்படி வாங்கியவை. நான் எம்.பி பதவிக்கு வேட்பாளராக இருந்தபோது என்னுடைய அனைத்து சொத்து விவரங்களையும் சரியாக தந்துள்ளேன்.
வெளிநாடுகளில் உள்ள எனது சொத்துகள் சட்டப்பூர்வமான முறையில் வாங்கப்பட்டவை. சில ஊடகங்களில் எனது சொத்துகள் சட்டத்திற்கு புறம்பாக வாங்கப்பட்டவை என செய்திகள் வெளியாகின்றன. ஊடகங்கள் உண்மை நிலை அறிந்து செய்திகளை வெளியிட வேண்டும். சொத்துக்கள் சட்டத்திற்கு புறம்பாக வாங்கியிருந்தால் வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் என் மீது நடவடிக்கை எடுக்க முடியும்” எனத் தெரிவித்தார்.