தமிழ்நாடு

தமிழக அரசு பேருந்தில் வழங்கப்பட்ட கர்நாடக மாநில பயணச்சீட்டு: குழப்பத்தில் பயணிகள்

தமிழக அரசு பேருந்தில் வழங்கப்பட்ட கர்நாடக மாநில பயணச்சீட்டு: குழப்பத்தில் பயணிகள்

kaleelrahman

திருவண்ணாமலை அரசு பேருந்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட பயணச் சீட்டில் கர்நாடக மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தின் பெயர் இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையிலிருந்து சிதம்பரம் சென்ற அரசு பேருந்தில் வடலூருக்குச் சென்ற பயணிக்கு வழங்கப்பட்ட சீட்டில் KSRTC என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபற்றி போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டபோது, நடத்துனர்கள் கையிலிருந்த பேப்பர் ரோல்கள் தீர்ந்த நிலையில் அருகிலிருந்த கர்நாடக பேருந்து நடத்துனர்களிடம் இரவலாக வாங்கியிருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட பணிமனைகளில் உரிய பேப்பர் ரோல்கள் வழங்கப்படுவதில்லை எனக் கூறும் நடத்துனர்கள் சிலர், இது போன்ற சிக்கல்களைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.