கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் முகநூல்
தமிழ்நாடு

அண்ணாமலை மாநிலத்திற்கு உண்மையாக இல்லை ஆனால்... - கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் விமர்சனம்

அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது, கட்சி அவருக்கு கொடுத்த வேலை மட்டுமே செய்கிறார் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: ஆனந்தன்

தொகுதி மறு சீராமைப்பு விவகாரம் தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், கர்நாடகாவுக்கு திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளார்களை சந்தித்தார் அப்போது அவரிடம், எந்த திட்டமும் இல்லாமல் நேற்றைய கூட்டம் நடந்ததாக அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவக்குமார்...

கூட்டு நடவடிக்கை குழு

இங்கு அண்ணாமலை சொன்னது முக்கியமானதில்லை. பிரதமரும் உள்துறை அமைச்சரும் இந்த நாட்டுக்கு என்ன சொன்னார்கள் என்பதுதான் முக்கியம். அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது, அவர் கட்சி அவருக்கு கொடுத்த வேலை மட்டுமே செய்கிறார். அவர் மாநிலத்திற்கு உண்மையாக இல்லை, அவர் கட்சிக்கு மட்டுமே உண்மையாக இருக்கின்றார். அவர் வேலையை செய்யட்டும்,

மாநில சட்டசபை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால் அது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேள்விக்கு, இதுகுறித்து ரேவந்த் ரெட்டி பேசி இருக்கின்றார். இந்த பிரச்னை குறித்து பேசி இருக்கிறார். முதலில் நமது ஒருங்கிணைந்த குரலை வலுவானதாக்குவோம். அதன் பிறகு நாடாளிமன்றம் குறித்து பேசலாம், என்றார்.

annamalai

தேசிய கட்சிக்கான காங்கிரஸ் இதை ஏன் முன்னெடுக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இங்கு மாநிலத்தில் காங்கிரஸ் இருக்கின்றார்கள். இது திமுக அரசு ஏற்பாடு செய்த கூட்டம். 40 முதல் 50 அரசியல் கட்சிகளை முதலமைச்சர் அழைத்திருந்தார். தென்னிந்தியாவைச் சேர்ந்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். ஒரிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களை சேர்ந்ததவர்களும் கலந்து கொண்டார்கள். அவர்கள் பணியை செய்கின்றார்கள், என்றார்.