தமிழ்நாடு

காவிரியில் நீர் திறக்க முதல்வர் குமாரசாமி ஒப்புதல்

காவிரியில் நீர் திறக்க முதல்வர் குமாரசாமி ஒப்புதல்

Rasus

தமிழகம் மற்றும் கர்நாடகா விவசாயிகள் பயன்பெற ஏதுவாக காவிரியில் நீர் திறக்க முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் போதிய மழை இல்லாத காரணத்தினால் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கர்நாடகா அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகா விவசாயிகள் பயன்பெற ஏதுவாக காவிரியில் நீர் திறக்க முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல் தெரிவித்துள்ளார். அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடகா அதிகாரிகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.