செய்தியாளர்: நவ்பல் அஹமது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட டெரிக் -செட்டிகுளம் சாலையின் ஓரத்தில் தண்ணீர் குழாய் கசிவு காரணமாக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு அந்த சாலையின் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராத விதமாக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தின் உள்ளே இருசக்கர வாகனத்துடன் விழுந்துள்ளார்
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பள்ளத்தில் விழுந்த இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்தான பதபதைக்கம் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.