தமிழ்நாடு

பெட்ரோல் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்

பெட்ரோல் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்

webteam

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் கல்லூரி மாணவர்கள் பெட்ரோல் திருட்டில் ஈடுபடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் வாகன பழுதுபார்க்கும் மையங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்களில் இருந்து சமீப காலமாக பெட்ரோல் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கல்லுவிளைப் பகுதியில் வாகன பழுதுபார்க்கும் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் இருந்து பெட்ரோல் மற்றும் உதிரி பாகங்கள் திருடப்பட்ட‌ன. இந்த திருட்டு சம்பவத்தை கண்டுபிடிப்பதற்காக கடையின் உரிமையாளர் சிசிடிவி கேமரா பொருத்தினார்.

அதன்பிறகு கடையில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் 3 இளைஞர்கள் பெட்ரோல், உதிரிபாகங்கள் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி கேமராவில் பதிந்த காட்சிகளை கொண்டு கடையின் உரிமையாளர் ராஜேஷ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவான மாணவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.