கன்னியாகுமரி
கன்னியாகுமரி புதிய தலைமுறை
தமிழ்நாடு

கன்னியாகுமரி | கழிவுகளை ஏற்றிவந்த லாரியை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த மக்கள்

PT WEB

கன்னியாகுமரி மாவட்டத்தில், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோழிப்போர்விளை பகுதியில் சென்ற லாரியில் துர்நாற்றம் வீசுவதை கண்டறிந்த நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்களுடன் சேர்ந்து இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். லாரி ஓட்டுநர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணனிடம் தக்கலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்லம் பகுதியில் இருந்து இந்த கழிவுகள் எடுத்துவரப்பட்டது தெரியவந்தது. கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு லாரிகளில் கழிவுகளை ஏற்றிவந்து, அவற்றை இங்கு கொட்டிச் செல்லும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனால் எல்லை மாவட்ட மக்கள் மத்தியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் நிலவி வருவதால், அதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். எனினும், இந்த நடவடிக்கைகளை மீறியும், கழிவுகள் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது.