தமிழ்நாடு

எல்லையை பாதுகாப்பதுடன், ஊரையும் பராமரிக்கும் ராணுவ வீரர்கள்

எல்லையை பாதுகாப்பதுடன், ஊரையும் பராமரிக்கும் ராணுவ வீரர்கள்

webteam

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பிறந்த மண்ணையும் பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் ராணுவப் பணியில் இருக்கிறார்கள். எல்லையில் நாட்டைக் காக்கும் இவர்கள், விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது பசுமை மற்றும் தூய்மைப் பணிகளில் ஈடுபடுவதை முக்கிய கடமையாக கொண்டிருக்கிறார்கள். கன்னியாகுமரி ஜவான்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி, வாட்ஸ்அப் குரூப் மூலம் இணைந்து சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இதில் 4700 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். விடுமுறையில் வரும் வீரர்கள் ஒன்றிணைந்து, சாலை சீரமைப்பு, சுகாதாரம், தண்ணீர் வசதி, இலவச மருத்துவம், இலவச கல்வி என சேவைப் பணிகள் செய்து அனைவரையும் நெகிழச் செய்கின்றனர். சேவைப் பணிகளுக்காக தங்கள் ஊதியத்தில் ஒருபகுதியை ஒதுக்கி பயன்படுத்துகிறார்கள். தொடக்கத்தில் வேடிக்கையாக பார்க்கப்பட்ட இவர்களது பணி, தற்போது மக்கள் மத்தியில் எழுச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது.