திருவள்ளுவர் சிலை புதியதலைமுறை
தமிழ்நாடு

கன்னியாகுமரி | திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா.. கலை நிகழ்ச்சிகளுடன் நடத்த ஏற்பாடு!

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு அரசு சார்பில் மூன்று நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

PT WEB

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு அரசு சார்பில் மூன்று நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு வரும் 30 தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை பட்டிமன்றம் கருத்தரங்குகள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது.

மேலும், சுமார் 37 கோடி ரூபாய் செலவில் விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையையும் இணைக்கும் கண்ணாடி இழை பாலமும் திறக்கப்பட இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் முக ஸ்டாலின் கலந்துக்கொண்டு கண்ணாடி இப்பாலத்தை திறந்து வைக்கிறார்.