தமிழ்நாடு

கன்னியாகுமரி மக்களவைக்கு ஏப்ரல் 6-ல் இடைத்தேர்தல்

கன்னியாகுமரி மக்களவைக்கு ஏப்ரல் 6-ல் இடைத்தேர்தல்

webteam

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். 

தமிழக நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் அறிவித்தார். அதன்படி தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக  ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்தார். 

குமரி மக்களவை இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.