தமிழ்நாடு

ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 72 சவரன் தங்க நகைகள் மாயம் - போலீசார் விசாரணை

ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 72 சவரன் தங்க நகைகள் மாயம் - போலீசார் விசாரணை

kaleelrahman

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரபல ஓட்டல் அதிபர் வீட்டில் 72 சவரன் தங்க நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு கேசரி தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் இவர் நாகர்கோவிலில் ஓட்;;டல் ஒன்றை நடத்தி வருகிறார் இவர் தனது மனைவிக்கு சொந்தமான நகைகள் அனைத்தையும் வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்த நிலையில், சுமார் 72 சவரன் தங்க நகை கொள்ளை போயுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இந்த கொள்ளை குறித்து நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.

]

புகாரைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் கதவுகள் மற்றும் பீரோ ஆகியவை உடைக்கப்படாத நிலையில் வீட்டில் வேலை பார்க்கும் நபர்கள் இந்த நகைகளை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வீட்டில் சமையல் வேலை செய்யும் பெண் மற்றும் கார் டிரைவர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.