கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து மக்களை மீட்கும் பணியில் அதிகாரிகளுடன் இணைந்து மீனவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. நேற்றில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அதிகாரிகளுடன் இணைந்து அப்பகுதி மீனவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியிருப்பு பகுதிகளில் சிக்கியுள்ளவர்கள் படகு மூலம் மீட்கும் பணிகள் தொடந்து நடைபெற்று வருகிறன. வெள்ளப் பெருக்கினால் நாகர்கோவில், திருநெல்வேலி மார்க்கத்தில் சாலை போக்குவரத்து தடைபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.