தமிழ்நாடு

பீலா ராஜேஷ் குறித்து அவதூறு பரப்பியதாக சுப.உதயகுமார் மீது வழக்குப்பதிவு

பீலா ராஜேஷ் குறித்து அவதூறு பரப்பியதாக சுப.உதயகுமார் மீது வழக்குப்பதிவு

webteam

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் குறித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் அவதூறு கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. அதிமுக அரசையும், முதலமைச்சர் பழனிசாமியையும் குறிப்பிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றை பகிர்ந்து சுப.உதயகுமார் பதிவிட்டதாக தெரிகிறது.

இது குறித்து வடிவீஸ்வரம் கிராம நிர்வாக அதிகாரி மோகன் என்பவர் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அணுஉலை எதிர்ப்பு இயக்க  ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.