தமிழ்நாடு

கண்ணகி கோயில் சித்திரை விழா ரத்து

jagadeesh

தமிழக - கேரள வன எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டதாக கூறப்படும் வரலாற்று சிறப்பு மிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா, சித்திரை பவுர்ணமியான இன்று நடக்க இருந்தது.

இந்நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி, கேரளாவின் இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷன் மற்றும் இரு மாநில அரசுத்துறை அதிகாரிகளின் ஆலோசனையில் விழாவை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான பூஜைகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.