தமிழ்நாடு

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாறிய சென்னை கண்ணகி நகர்..!

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாறிய சென்னை கண்ணகி நகர்..!

webteam
(கோப்பு புகைப்படம்)

புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக சென்னை மாநகராட்சி தென் மண்டல துணை ஆணையர் அல்பி ஜான் ஐஏஎஸ், கண்ணகி நகர் பகுதியில் ஆய்வு செய்தார்.

தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் அதிகபட்சமாக சென்னை முதலிடத்தில் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் சென்னை ஒ.எம்.ஆர் சாலை துரைப்பாக்கம் அருகே உள்ள கண்ணகி நகரிலும் கொரோனா பாதிப்பு உள்ளது. மொத்தம் அங்கு 5000 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. நெருக்கடியாக வசித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் நேற்று 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்த செய்தி புதிய தலைமுறையில் வெளியானது.

இந்த நிலையில் அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி தென் மண்டல துணை ஆணையர் அல்பி ஜான் ஐஏஎஸ், கண்ணகி நகர் பகுதியில் ஆய்வு செய்தார். இதுபோன்ற அதிகமான மக்கள் வாழும் பகுதியில் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய பகுதிக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு குடிசை மாற்று வாரிய பகுதியில் உள்ள ஐந்து பேருக்கு நேற்று தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் புளியந்தோப்பில், பாசிட்டிவ் நோயாளியின் இறுதிச்சடங்கிற்கு சென்று வந்ததால் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.