தமிழ்நாட்டையும் மணிப்பூரையும் ஒப்பிட்ட தவெக தலைவர் விஜயின் பேச்சு ஏற்புடையதல்ல என பேசியிருக்கும் திமுக எம்பி கனிமொழி, அரசியலில் மேடை ஏறினால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைப்பதாக விஜயின் பேச்சுக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “நான் மணிப்பூர் சென்றுள்ளேன், எத்தனை பேர் போனார்கள் என தெரியவில்லை. அரசியலில் மேடை ஏறினால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்கின்றனர். மணிப்பூரையும் தமிழ்நாட்டையும் ஒப்பிடுவது ஏற்புடையதல்ல, மணிப்பூரில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு நாம் பேச வேண்டும்” என்று பேசினார்.
மேலும், மணிப்பூருக்கு பாஜக நீதி வழங்காமல் இருப்பதைவிட விஜய் பேச்சு மோசமானது என்று நேரிடையாக விமர்சனம் செய்தார்.