தமிழ்நாடு

இந்தியில் திட்டப் பெயர் வைத்தால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை : கனிமொழி

இந்தியில் திட்டப் பெயர் வைத்தால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை : கனிமொழி

webteam

ரயில்வேத்துறையை தனியார் மயமாக்குவதை தமிழக மக்கள் எதிர்ப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். 

மக்களவையில் பேசிய அவர் ஈரோட்டில் உள்ள ரயில் நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என்றும் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு‌ மத்திய அரசு துறைகளின் ‌திட்டங்களுக்கு இந்தி மொழியில் பெயர் சூட்டுவது, தமிழ் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்களுக்கு சிரமம்‌ தருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் க‌னிமொழி கூறியுள்ளார்.

மேலும், “ராஷ்ட்ரீய ரயில் சன்ரக்ஷ கோஷ் என்ற ஒரு திட்டம் ரயில்வேயில் உள்ளது. இது என்ன திட்டம் என புரிந்து கொள்ள நான் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. இது போன்ற எல்லா திட்டங்களுக்கும் இந்தியிலேயே பெயர் வைக்கப்படுகிறது. இது போன்று பெயர் வைத்‌தால் எனது தொகுதியில் உள்ள ஒரு சாமானியர் அதை எப்படி புரிந்துகொள்ள முடியும். 

தூத்துக்குடி அருகே பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா என்ற பெயர் கொண்ட பலகை வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அர்த்தம் எனக்கே புரியவில்லை. அரசு திட்டங்களுக்கு ஆங்கிலத்திலோ அல்லது மாநில மொழிகளிலோ பெய‌ர் வைப்பதுதான் சரி. இது போன்று திட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பது மத்திய அரசின் மனப்பாங்கையே காட்டுகிறது” எனக் கூறினார். 

திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு தனி ரயில் கோட்டம் ‌உருவாக்க வேண்டும் என்றும் கனிமொழி கேட்டுக்கொண்டார். ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் சிறுபான்மையினருக்கு எதிராக மத ரீதியான தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.