தமிழ்நாடு

மாற்றுத் திறன் குழந்தைகளையும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் - கனிமொழி

மாற்றுத் திறன் குழந்தைகளையும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் - கனிமொழி

JustinDurai

சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் மாணவர்கள் கொரோனா காலத்தில் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்துள்ளார் கனிமொழி.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,  ''10ம் வகுப்பில் அனைத்து மாணவர்களையும் தேர்வின்றி தேர்ச்சியடைய அனுமதித்த தமிழக அரசு, “சிறப்பு குழந்தைகள்” மற்றும் “மாற்றுத் திறன்” மாணவர்கள் கொரோனா காலத்தில் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல்.

தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு, “சிறப்பு குழந்தைகளையும், மாற்றுத் திறன் குழந்தைகளையும்” தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.