விஜய் - கனிமொழி web
தமிழ்நாடு

“பழிபோட காரணம் தேடாதீர்கள்.. திமுக ஆட்சியில் இப்படியான சூழல் இல்லை” - கனிமொழி

திமுகவை முதல்வர் விஜய் விமர்சித்திருந்த நிலையில், பழிபோட காரணம் தேடாதீர்கள் என திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பேசியுள்ளார்.

Rishan Vengai

வாசுதேவநல்லூரில் திமுக வெற்றி நன்றி கூட்டத்தில் கனிமொழி, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த சூழல் இல்லை என வலியுறுத்தினார். ஆட்சியாளர்கள் சட்டம் ஒழுங்கை சரி செய்யாமல் பிறர்மீது பழி சுமத்த காரணம் தேடினால் மக்கள் பொறுத்திருக்க மாட்டார்கள் என்றும் எச்சரித்தார்.

சட்டம் ஒழுங்கை சரி செய்யாமல் அடுத்தவர் மீது பழிபோட ஆட்சியாளர்கள் காரணங்களை தேடினால், தமிழ்நாட்டு மக்கள் அதிக நாள் பொறுத்திருக்க மாட்டார்கள் என, திமுக துணைப் பொதுச்செயலர் கனிமொழி கூறியுள்ளார்.

விஜய்

வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுகவெற்றி பெற்ற நிலையில், திமுக சார்பில்புளியங்குடியில் நன்றி அறிவிப்பு கூட்டம்நடைபெற்றது. இதில் பேசிய கனிமொழி, திமுக ஆட்சியில் இப்படியான சூழல்தமிழ்நாட்டில் இல்லை என தெரிவித்தார்.

மத்திய அரசு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தைச் செயல்படுத்தத் தீவிரம் காட்டி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (JPC) அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. அந்த அறிக்கை முறையாகத் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, இது குறித்து முழுமையான கருத்துகளைத் தெரிவிக்க முடியும்.

கனிமொழி

திரும்பத் திரும்ப தி.மு.க-வை விஜய் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார் என்ற கேள்விக்கு, அவர்கள் இன்னைக்கு ஆளுங்கட்சியில் இருக்கிறார்கள், அவர்கள் சரியான ஆட்சியை நடத்துவதற்கான வழிமுறைகளை தான் அறியணுமே தவிர, திராவிட முன்னேற்றக் கழகத்தையே குறை சொல்லிக் கொண்டிருப்பதனால் மக்கள் இங்கே நடந்து கொண்டிருக்கக்கூடிய தவறுகள், இங்கே நடந்து கொண்டிருக்கக்கூடிய சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை எல்லாம் மறந்து விடமாட்டார்கள்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எப்படி இருக்கிறது என கேட்டதற்கு, செய்தியாளர்களான உங்களுக்குத்தான் நன்றாக தெரியுமே என பதில் அளித்தார்.