தமிழ்நாடு

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பணிகளை ஆய்வு செய்த கனிமொழி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பணிகளை ஆய்வு செய்த கனிமொழி

JustinDurai

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான பணிகளை ஆய்வு செய்தார் கனிமொழி.

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 5,074 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான பணிகளை ஆய்வு செய்தார். அப்போது இந்து அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

ந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.