தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலினுக்கு கனிமொழி வாழ்த்து

உதயநிதி ஸ்டாலினுக்கு கனிமொழி வாழ்த்து

JustinDurai

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி முதன்முதலாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு, 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  இந்நிலையில் அவருக்கு தூத்துக்குடி எம்.பி.யும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''சேப்பாக்கம் தொகுதியில் மிக சிறப்பான வெற்றியை பெற்றிருக்கும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். முதல் முறையாக பொறுப்பேற்கும் உங்கள் பணிசிறக்க வாழ்த்துகள்'' எனத் தெரிவித்துள்ளார்.