தமிழ்நாடு

ரேஷன் கடை முன் போராட்டம்: கனிமொழி கைது

ரேஷன் கடை முன் போராட்டம்: கனிமொழி கைது

webteam

சென்னை ராயப்பேட்டையில் ரேஷன் கடை முன் போராட்டம் நடத்திய திமுக எம்.பி, கனிமொழி கைது செய்யப்பட்டார்.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளின் முன் திமுக போராட்டம் நடத்தியது. சென்னை ராயப்போட்டை ரேஷன் கடை முன் போராடத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி, பேசும்போது, தமிழகத்தில் ரேஷன் கடைகளில் சரிவர பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதில்லை என குற்றம்சாட்டினார். தமிழகத்தில் டாஸ்மாக் வியாபாரம் தான் சரியாக நடக்கிறது. டாஸ்மாக் கடைகளுக்கு கொடுக்கப்படும் அக்கறை, ரேஷன் கடைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. பாமாயில், பருப்பு, அரிசி இல்லை என்பதுதான் நியாயவிலைக் கடைகளின் நிலை என கனிமொழி தெரிவித்தார்.

ரேஷன் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் அவை ஏன் விநியோகம் செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.