தமிழ்நாடு

தமிழகத்தின் குடிநீருக்காக திறக்கப்பட்ட கண்டலேறு அணை..!

webteam

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக மீண்டும் கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்றிரவு தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு கங்கா ஒப்பந்தத்தின்படி ஆண்டுதோறும் தமிழகத்திற்கு இரண்டு தவணைகளாக கண்டலேறு அணையில் இருந்து 12 டி.எம்.சி.தண்ணீர் வழங்க தமிழக-ஆந்திர அரசுகளிடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்திற்கு கிருஷ்ணா நதிநீர் திறக்கப்பட்டு 7.5 டி.எம்.சி நீர் வந்தடைந்த நிலையில் ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டது. சென்னைக்கு தொடர்ந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு ஆந்திர அரசிற்கு கோரிக்கை விடுத்ததையடுத்து கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1200 கனஅடி தண்ணீரினை ஆந்திர அரசு கடந்த 25-ஆம் தேதி திறந்துள்ளது.

இந்த நீர் 152 கி.மீ. தொலைவில் உள்ள தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு இன்று இரவு வந்தடையும் என எதிர்பார்பார்க்கப்படுகிறது.