தமிழ்நாடு

தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக் கொண்ட திமுக பிரமுகர் மாரடைப்பால் மரணம்

தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக் கொண்ட திமுக பிரமுகர் மாரடைப்பால் மரணம்

kaleelrahman

காஞ்சிபுரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்.பாலு பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தொண்டர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளார்களை ஆதரித்து திமுக கழக பொருளாளரும், நாடாளுமன்றக் குழு தலைவருமான டிஆர்.பாலு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர்கள் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி சந்தானம் (67) என்பவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து இவரை மீட்டு முதலுதவி அளித்து காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிவகாஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.