தமிழ்நாடு

“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி

“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி

webteam

நித்யானந்தா தன்னை அழைத்தால் அவரின் புதிய நாட்டிற்குச் செல்ல தயாராக இருப்பதாக காஞ்சிபுரம் தொண்டை மண்டலத்தின் மடாதிபதி புதிய தலைமுறைக்கு பிரத்தியேக பேட்டியளித்தார்.

காஞ்சிபுரத்தில் தொண்டை மண்டல மடத்தின் 232வது ஆதீனமாக ஞானப்பிரகாச பரமாச்சாரியார் உள்ளார். இந்த மடத்திற்கு ரூ.1,000 கோடி சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஞானப்பிரகாச பரமாச்சாரியார் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “தற்போது நித்தியானந்தா புதிதாக உருவாகியிருக்கும் நாட்டிற்கு என்னை அழைத்தால் நிச்சயமாக செல்ல தயாராக இருக்கிறேன். தொண்டை மண்டல ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக தன்னை அறிவிக்க வேண்டுமென நித்யானந்தா என்னிடம் இரண்டு முறை வலியுறுத்தினார். 

ஆனால் தொண்டை மண்டல ஆதீனத்தை பொருத்தவரை இளைய மடாதிபதியாக யாரையுமே வைக்கப்பட மாட்டாது என்கின்ற காரணத்தினால் அவரை இளைய மடாதிபதியாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை. தற்போது நித்யானந்தாவால் புதிதாக உருவாகியிருக்கும் நாடு குறித்து எனக்கு எந்த ஒரு தகவலும் தெரியாது. அந்த நாடு குறித்து எனக்கு எந்த ஒரு அழைப்பும் விடுக்கவில்லை. ஆனால் இந்துக்களுக்கு என்று தனியாக உருவாகியிருக்கும் நாட்டிற்கு நூறு சதவீதம் நான் ஆதரவு தெரிவிக்கிறேன். நித்யானந்தா என்னை அழைத்தால் நான் நிச்சயமாக அவரின் செலவில் அந்த நாட்டிற்கு சென்று வருவேன்” என்றார்.