தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 66 ஏரிகள் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக, இங்குள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 912 ஏரிகளில் 66 ஏரிகள் நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மழை நீடிக்கும் பட்சத்தில், மற்ற ஏரிகளும் விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.