தமிழ்நாடு

காஞ்சிபுரம் கருணை இல்லத்தில் உளவுத்துறை விசாரணை!

காஞ்சிபுரம் கருணை இல்லத்தில் உளவுத்துறை விசாரணை!

webteam

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் மத்திய உளவுத்துறை விசாரணை மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஷ்வரத்தில் செயிண்ட் ஜோசப் கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கருணை இல்லத்தில், ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பிச்சைக்காரர்களை அழைத்து வந்து, அரசின் உரிய உத்தரவின்றி கருணைக் கொலை செய்வதாகப் புகார் எழுந்தது. அத்துடன் மனித உடல்களும், எலும்புகளும் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அங்கு காவல் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் அங்கு மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி கோட்டாட்சியர், ஆதரவற்றோர் இல்லத்தில் எவ்வித சட்டவிரோத செயலும் நடைபெறவில்லை என தெரிவித்திருந்தார். மேலும், ஆய்வு தொடர்பான விரிவான அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்த நி‌லையில், இன்று மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.