தமிழ்நாடு

காஞ்சிபுரம்: அரசு பள்ளியில் 3 பேருக்கு கொரோனா; பள்ளியை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை!

காஞ்சிபுரம்: அரசு பள்ளியில் 3 பேருக்கு கொரோனா; பள்ளியை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை!

kaleelrahman

மாத்தூர் அரசுப் பள்ளியில் ஆசிரியர், மாணவி என மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பள்ளியை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் பிளஸ் 2 மாணவர்கள், 105 பேருக்கு மட்டும் வகுப்பு நடக்கிறது. இந்நிலையில், இந்தப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு, நான்கு தினங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு ஆசிரியர், ஒரு அலுவலக ஊழியர், ஒரு மாணவி என மூவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி தெளித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் மாத்தூர் கிராம மக்கள் சிலர் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது, மற்ற மாணவர்களுக்கு, கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை ஆசிரியரிடம் வலியுறுத்தினர். கொரோனா பரவுவதால், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமல்ல பெற்றோர் விருப்பப்பட்டால் அனுப்பலாம் என ஆசிரியர்கள் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.