தமிழ்நாடு

``மக்கள் கருத்துகளை அரசிடம் தெரியப்படுத்துகிறோம்”- காஞ்சிபுரம் ஆட்சியர் பிரத்யேக பேட்டி

webteam

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, மக்களின் தேவைகளை அரசுக்கு தெரியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பான அனைத்து திட்டமிடலும் டிட்கோ மேற்கொண்டு வருகிறது. சர்வதேச புள்ளிக்கான டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில் அந்தப் பணிகள் நிறைவு பெற்றவுடன் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்க உள்ளது.  இதனிடையே விவசாயமே பிரதானமாக இருக்கும் இந்த பகுதியில் விமான நிலையம் அமைப்பதை அரசு கைவிட வேண்டும் எனக் கோரும் பரந்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் மாநில அரசின் வருமானத்துக்காக விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதை ஏற்க முடியாது எனக் கூறுகின்றனர்.

மேலும்  இந்த விமான நிலையம் 30 சதவீத நீர் நிலைகளில் அமைய உள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இது குறித்து காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் புதியதலைமுறை சார்பில் கேட்டபோது, “மக்களின் கருத்துகளை அரசிடம் தெரியப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். அதே நேரத்தில் விமான நிலையத்தின் கட்டுமான பணிகள், தொழில்நுட்ப வசதிகள், நிலம் கையகப்படுத்துதல், தொடர்பான எந்த தகவல்களையும் தற்போதைக்கு வெளியிட முடியாது” என தெரிவித்தார்.