தமிழ்நாடு

‘நாளை கருட சேவைக்குப் பின் அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி’ : ஆட்சியர்

webteam

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் ஆடி கருட சேவையை முன்னிட்டு ‌நாளை ‌நண்பகல் 12 மணிக்கு பிறகு அத்திவரதரை பார்ப்பதற்கான விவிஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். 

கருட சேவையையொட்டி நாளை 12 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் மூடப்பட்டு, கோவிலுக்குள் இருக்கும் பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று அவர் தெரிவித்தார். மாலை 4 மணிக்கு தொடங்கும் கருட சேவை இரவு 8 மணிக்கு நிறைவடையும் என்றும், அதன்பின் பொது தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆட்சியர் கூறினார். மேலும் திட்டமிட்டப்படி வரும் 17ஆம் தேதி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் வைக்கப்படுவார் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். 45ஆவது நாள் அத்திவரதர் வைபவம் வரை சுமார் 90 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்து சென்றுள்ளனர்.