தமிழ்நாடு

காஞ்சிபுரம்: கார்- வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; காரில் பயணித்த 3 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: கார்- வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; காரில் பயணித்த 3 பேர் உயிரிழப்பு

kaleelrahman

காஞ்சிபுரம் அருகே கார் - வேன் நேருக்கு நேர் மோதிய சாலை விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. அரியலூரில் பணிபுரிந்து வரும் இவர், தனது நண்பர்கள் இருவருடன் நேற்று இரவு பேரம்பாக்கம் செல்ல காஞ்சிபுரம் நோக்கி காரில் சென்றுள்ளார்.

அப்போது, வந்தவாசி சாலையில் மானாம்பதி அருகே வந்தபோது எதிரே வந்த வேன் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், காரில் பயணம் செய்த சுந்தரமூர்த்தி, அவரின் நண்பர்கள் இருவர் உட்பட மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருநகர் போலீசார், உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்து குறித்து பெருநகர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.