onion dosai puthiya thalaimurai
தமிழ்நாடு

’நாங்க ஆர்டர் செய்தது ஆனியன் ஊத்தப்பம்.. ஆனா அவங்க குடுத்தது..’ - ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி!

காஞ்சிபுரம் உணவகம் ஒன்றில், ஊத்தப்பம் சாப்பிடச் சென்றவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைக் கண்டு, வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

PT WEB

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகேயுள்ள டி.கே.நம்பி தெரு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தனது நண்பருடன் சாப்பிடச் சென்றுள்ளார். அங்கு சாப்பிடுவதற்காக, ஆனியன் ஊத்தப்ப தோசை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஊத்தப்பம் வந்த பிறகு, அதை உண்ண முயன்றபோது இரும்புத்துண்டு கம்பி ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து உணவக மேலாளரிடம் புகார் தெரிவித்ததுடன், உணவகத்தின் கவனக் குறைபாடான விஷயத்தையும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வாடிக்கையாளர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அந்த வீடியோ, வைரலாகி வருகிறது.

இதுகுறித்து உணவக மேலாளர், “இது, எப்படி வந்தது என்று தெரியவில்லை. வாடிக்கையாளர் அமர்ந்திருந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்த பின்னரே என்ன நடந்தது என்பது குறித்து தெரியும்” என்றார்.