மதுரையில் புதிய தலைமுறை மற்றும் கிங்மேக்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான கனவு மெய்ப்பட நிகழ்ச்சி நடைபெற்றது ஏராளமான மாணவிகள் பங்கேற்பு.
மதுரை பரவை பகுதியில் உள்ள மங்கையர்கரசி கல்லூரியில் புதிய தலைமுறை மற்றும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடக்கும் கல்லூரி மாணவிக்கான கனவு மெய்ப்பட நிகழ்ச்சியை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை மதுரை கோட்டாட்சியர் ஷாலினி, புதிய தலைமுறை அரசியல் பிரிவு ஆசிரியர் கார்த்திகேயன், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனத் தலைவர் பூமிநாதன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐ ஆர் எஸ் ஐஎப்எஸ் கனவில் இருக்கும் மாணவிகளுக்கு இந்த நிகழ்ச்சி மூலமாக தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தெல்லாம் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மாணவிகள் இந்த நிகழ்ச்சிகள் மிகுந்த பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்துள்ளனர், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செயலாளர் கல்லூரி செயலாளர் அசோக் குமார், கல்லூரி முதல்வர் உமா பாஸ்கர், கல்லூரியின் கல்வி புரவலர் செந்தூர் பிரியதர்ஷினி. ஆகியோர் கலந்து கொண்டனர்.